தமிழ் இணைய அறிஞர் உத்தமர்தம்பி
உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடக்கத் துவங்கிவிட்டாராம்!நம் உமர்தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!
உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடக்கத் துவங்கிவிட்டாராம்!நம் உமர்தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!
இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்!
அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ்வாட் இவர்களைப் பற்றி கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்!
சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நம் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர்தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்து கொண்டு, ஏழாம் வகுப்பில் திரு ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப்பிடிக்கும் உமர்தம்பிக்கு.
--
Source: http://thendral.blogspot.com/2011/05/blog-post_19.html
0 komentar:
Posting Komentar